மழைநீர் சேகரிப்பு குறித்து பயிற்சி


மழைநீர் சேகரிப்பு குறித்து பயிற்சி
x

காரைகாலை சேர்ந்த விவசாயிகளுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேமிப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், காரைக்கால் மாவட்டத்தில் சில சமயங்களில் ஒரே நேரத்தில் அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்படுகிறது. முறையான வழிமுறைகளை பின்பற்றி வயல்களில் பண்ணைக்குட்டைகள் போன்ற கட்டமைப்பினை ஏற்படுத்தி, அதில் தண்ணீரை சேமித்து விவசாயம், மீன் வளர்ப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம் என்றார்.

தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த், மழைநீர் சேகரிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். தொழில்நுட்ப வல்லுநர் திவ்யா, பருத்தியில் ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பிலும், தொழில்நுட்ப வல்லுநர் கதிரவன், தென்னையில் நீர் மற்றும் உர நிர்வாகம் என்ற தலைப்பிலும் பேசினர்.

முடிவில், விரிவாக்கத் துறை தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நன்றி கூறினார்.


Next Story