அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்


அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்
x

புதுவையில் அடையாளம் தெரியாத 2 ஆண் நபர்கள் பிணமாக கிடந்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி சின்னவாய்க்கால் வீதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதகடிப்பட்டு ஊறல்குட்டை ரோட்டில் உள்ள கழிவுநீர் வாய்காலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story