சென்னையில் ‘நிவர்’ புயலின் தாக்கம்: சாலைகளில் தேங்கிய மழைவெள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு


சென்னையில் ‘நிவர்’ புயலின் தாக்கம்: சாலைகளில் தேங்கிய மழைவெள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2020 12:00 AM GMT (Updated: 26 Nov 2020 10:57 PM GMT)

‘நிவர்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளிலும், குடியிருப்புகளிலும் மழைவெள்ளம் சூழ்ந்தது.

சென்னை

வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி சாலையில் இடுப்பளவு தேங்கிய மழைநீரை கடந்து செல்லும் அப்பகுதியினரை படத்தில் காணலாம்.



சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள போஸ்டல் காலனி பகுதியில் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தை படத்தில் காணலாம்.



சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அண்ணா பிரதான சலையில் நேற்று பெய்த மழையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளம்.



சென்னையே கனமழையில் தத்தளித்த போதும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் எதிர் பார்த்த அளவு தண்ணீர் நிரம்பாமல் இருப்பதை படத்தில் காணலாம்.



தொடர் மழையால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோவில் தெப்பகுளம் நிரம்பி உள்ளதை படத்தில் காணலாம்.



கனமழையின் காரணமாக முடிச்சூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்.



திருவொற்றியூர் ராஜாஜி நகர் முழுவதும் மழைநீர் சூழ்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.



மேற்கு தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை ஆர்வத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்.



தாம்பரம் கிஷ்கிந்தா ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் காட்சி.



தாம்பரம் வரதராஜபுரத்தில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கி தவித்த குடியிருப்புவாசிகளை தீயணைப்பு படையினர் படகு மூலம் மீட்டு வந்த காட்சி.

Next Story