புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.5,828 கோடி நிதி ஒதுக்க வேண்டும் - முதல்-மந்திரி ரங்கசாமி கோரிக்கை


புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.5,828 கோடி நிதி ஒதுக்க வேண்டும்  - முதல்-மந்திரி ரங்கசாமி கோரிக்கை
x
தினத்தந்தி 24 Sept 2024 9:08 AM IST (Updated: 24 Sept 2024 9:40 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.5,828 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என முதல்-மந்திரி ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி ரங்கசாமியை மத்திய அரசின் உள்துறை செயலர் கோவிந்த் மோகன் சந்தித்தார். அப்போது அவரிடம் புதுச்சேரியில் நிலுவையில் இருக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ரங்கசாமி வழங்கினார்.

மேலும் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.3,925 கோடி, ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்ட ரூ.420 கோடி, மருத்துவம் மற்றும் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க ரூ.983 கோடி என மொத்தம் ரூ.5,828 கோடி நிதியை புதுச்சேரிக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என முதல்-மந்திரி ரங்கசாமி கேட்டுக் கொண்டார்.



Next Story