சென்னை புறநகர் ரெயில்கள் சேவை ரத்து மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு


சென்னை புறநகர் ரெயில்கள் சேவை ரத்து மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2024 11:27 AM GMT (Updated: 12 Aug 2024 1:25 PM GMT)

சென்னை புறநகர் ரெயில்கள் சேவை ரத்து மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், தாம்பரம் ரெயில் நிலையத்தில் 2-ம் கட்ட பராமரிப்பு பணி காரணமாக கடந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து இந்த மாதம் 14-ஆம் தேதி சென்னை புறநகர் ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தாம்பரம், சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரெயில்கள் சேவை பெருமளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தாம்பரத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி முடிவடையாததால் சென்னை புறநகர் ரெயில்கள் சேவை ரத்து 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் சேவை மாற்றம் வரும் 14-ம் தேதி வரை மாற்றம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்-தாம்பரம், விழுப்புரம் - மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் - சென்னை கடற்கரை ரெயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க... சென்னையில் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 14ம் தேதி வரை 55 மின்சார ரெயில்கள் ரத்து - முழு விவரம்


Next Story