நாளை அறிமுகமாகும் தமிழக வெற்றிக் கழக கொடி


நாளை அறிமுகமாகும் தமிழக வெற்றிக் கழக கொடி
x
தினத்தந்தி 21 Aug 2024 11:50 AM IST (Updated: 21 Aug 2024 11:50 AM IST)
t-max-icont-min-icon

விஜய் கட்சியின் கொடி எந்த நிறத்தில் இருக்கும் என்று தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்துள்ளார். இருப்பினும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படவில்லை. இந்த கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக்கொடி, பனையூரில் கட்சி அலுவலகத்தில் நடப்பட்டுள்ள 45 அடி உயர கொடி கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டது. இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியா? என்று தெரியாத நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (வியாழக்கிழமை) அறிமுகம் செய்கிறார். சென்னை பனையூரில் நடைபெறும் விழாவிற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜய் கட்சியின் கொடி எந்த நிறத்தில் இருக்கும் என்று தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

1 More update

Next Story