சென்னை மெட்ரோ ரெயில்களில் செப்டம்பர் மாதத்தில் 1.01 கோடி பேர் பயணம்

கோப்புப்படம்
அதிகபட்சமாக கடந்த மாதம் 4-ந்தேதி 3.97 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் 1,01,46,769 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகளும், மே மாதத்தில் 89,09,724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும், ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த மாதம் 4-ந்தேதி 3,97,217 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






