மின்சார ரெயிலில் பயணியிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபர் கைது

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மின்சார ரெயிலில் பயணியிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபர் கைது
Published on

சென்னை,

சென்னை கடற்கரை-கோட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று அதிகாலை 4 மணியளவில் மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் இருந்த பயணியை, வடமாநில வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி, செல்போனை பறித்தார்.

பின்னர் மின்சார ரெயிலின் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி தப்பித்து சென்று விட்டார். இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப் படை அமைத்து, குற்றம் நிகழ்ந்த 12 மணி நேரத்துக்குள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக் சிங் (29) என்ற மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com