சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் பதவியேற்பு

தாம்பரம் போலீஸ் கமிஷனராக 2 முறை பணியாற்றியுள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் பதவியேற்பு
Published on

சென்னை,

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த அபின் தினேஷ் மோடக் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவர் சிபிசிஐடி கூடுதல் போலீஸ் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கூடுதல் டிஜிபி அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1996ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக இந்திய காவல் பணியில் சேர்ந்த இவர் திருப்பூரில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கினார். அதன்பின்னர், பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி ஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அமல்ராஜ் சென்னை கூடுதல் கமிஷனராக பணியாற்றினார். மேலும், கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற பிறகு தாம்பரம் போலீஸ் கமிஷனராக 2 முறை பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள அமல்ராஜ் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com