மரக்காணம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் காட்ட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
மரக்காணம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மரக்காணம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த வண்டிபாளையம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தை என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் மனித மிருகங்கள் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது.

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசு கூடுதல் கவனமும், அக்கறையும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com