8 தொகுதிகளில் நாளை அண்ணாமலை பிரசாரம்

பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
8 தொகுதிகளில் நாளை அண்ணாமலை பிரசாரம்
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நாளை 8 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நாளைய தினம் (17.04.2026) காலை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளிலும், நாளை மாலை, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி சட்டமன்றத் தொகுதிகளிலும், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறேன்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், எல்லா துறைகளிலும் ஊழல், வாரிசு அரசியல் இவற்றால், ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தை நாசமாக்கிய திமுக அரசை அகற்ற பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com