இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி - அண்ணாமலை

தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்த பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.
annamalai
Published on

சென்னை,

வி தி லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

13 லட்சம் உறுப்பினர்கள்

கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, http://wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.

நன்றிகள்

இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டு பயணம்.

பயணத்தை முன்னெடுப்போம்

மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்த பயணத்தை முன்னெடுப்போம்.

தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்த பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com