முதல்-அமைச்சர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து

தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தவெக தலைவர் விஜய், பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டினார். இதையடுத்து, நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் மக்கள் மத்தியில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள். தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com