ஒரே விமானத்தில் பயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு


ஒரே விமானத்தில் பயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அண்ணாமலையும் ஒரே விமானத்தில் பயணம் மேற்கொண்டனர்.

கோவை,

கோவை அவினாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு விழா, உலக புத்தொழில் மாநாடு, அரசு கல்லூரியில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு, தங்க நகை தொழில் பூங்கா அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை வந்தார்.

பின்னர் அவர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 2.10 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானத்தில் ஏறி சென்னைக்கு புறப்பட்டார்.

அதே விமானத்தில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் சென்றார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணாமலை திடீரென சந்தித்தார். அப்போது ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

1 More update

Next Story