அத்திக்கடவு–அவிநாசி 2.0 திட்டம் உடனடி செயல்படுத்தப்படும் - எல்.முருகன் வாக்குறுதி

அத்திக்கடவு–அவிநாசி திட்டம் எவ்வித முன்னேற்றமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எல்.முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.
அத்திக்கடவு–அவிநாசி 2.0 திட்டம் உடனடி செயல்படுத்தப்படும் - எல்.முருகன் வாக்குறுதி
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரியும், பாஜக அவிநாசி தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அவிநாசி தொகுதியை திமுக அரசு புறக்கணித்து வருகிறது. அவிநாசி தொகுதியை மாற்றான் தாய் பிள்ளையாகவே திமுக அரசு பார்க்கிறது. 90 சதவீதம் முடிவடைந்த அத்திக்கடவு–அவிநாசி திட்டம் எவ்வித முன்னேற்றமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில, நமது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், எனது வாக்குறுதிகளான அத்திக்கடவு–அவிநாசி 2.0 திட்டம் உடனடி செயல்பாடு, முழுமையான பாதாளச் சாக்கடைத் திட்டம், பாண்டியாறு–பவானி நதி இணைப்பு, ஏழைகளுக்கு பிரதமர் வீடு திட்டம் போன்ற எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இந்தத் தேர்தலில், அவிநாசி சட்டமன்றத் தொகுதியின் முன்னேற்றத்திற்காக தாமரை சின்னத்திற்கு உங்கள் ஆதரவை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com