உடன்குடி அருகே ஆட்டோ - பைக் மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு!

ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடன்குடி அருகே ஆட்டோ - பைக் மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு!
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை மதுசூதனபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் கணேஷ் (31), கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று அவர் உடன்குடியில் இருந்து செட்டியாபத்து நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன் சென்ற லோடு ஆட்டோ மீது அவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கணேஷ், தலையில் பலத்த காயம் அடைந்தார். அருகில் சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கணேஷ் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com