தூத்துக்குடியில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.36 கோடி ரொக்கம் பறிமுதல்!

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு மட்டும் ரூ.8,12,900 என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.36 கோடி ரொக்கம் பறிமுதல்!
Published on

தூத்துக்குடி,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று (22.04.2026) வரை நடத்தப்பட்ட தீவிரக் கண்காணிப்பில் கண்டறியப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:

உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.2,36,73,618

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.38,42,187

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.8,12,900

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படைகள் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாகக் கொண்டு செல்லப்பட்ட மதுபானங்கள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com