வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு என் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதன் தலைவர் விஜய்க்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பது இத்தேர்தல் முடிவுகள் தெரிய வந்துள்ளது.

கடும் போராட்டத்திற்கு நடுவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள அதிமுக, பாமக, பாஜக, அமமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிகளில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும், எனக்காக தேர்தல் பணியாற்றிய தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com