கண்டெய்னர் லாரிகள் இன்று இரவு முதல் வேலை நிறுத்தம்

காட்டுப்பள்ளி துறைமுக ஒப்பந்ததார்கள் கமிட்டியில் உள்ள 7 சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் புதியதாக அமல்படுத்தப்பட்ட வாகன தர சான்றிதழ் புதுப்பிப்பு கட்டண உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், ஆன்லைன் வழக்குகளை கட்டுப்படுத்த வேண்டும்,
எல்லை சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சென்னையில் இயங்கும் 13 கண்டெய்னர் லாரி சங்கங் கள், மோட்டார் வெளிச்சம் அமைப்பில் உள்ள 75 வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் உட்பட அனைத்து டிரைலர், டாரஸ், லாரி உரிமையாளர்கள் சங்கத்தி னர்,மோட்டார் வெளிச்சம் அமைப்பினர் லாரி உரிமை யாளர்கள், டிரான்ஸ் போர்டர்ஸ் புக்கிங் ஏஜென்ட்ஸ், லாரி ஓட்டு நர்கள் ஆகியோர் இன்று நள்ளிரவு முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையே சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகளை இயக்கும் காட்டுப்பள்ளி துறைமுக ஒப்பந்ததார்கள் கமிட்டியில் உள்ள 7 சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதில்லை தங்களது வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவித்து உள்ளனர்.






