தொடர் அதிகரிப்பு.! நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு

முட்டை கொள்முதல் விலை கடந்த 5 நாட்களில் 40 காசுகள் அதிகரித்துள்ளது.
தொடர் அதிகரிப்பு.! நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

10 காசுகள் உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை நேற்றைய நிலவரப்படி 600 காசுகளாக (ரூ.6) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 610 காசுகளாக (ரூ.6.10) அதிகரித்துள்ளது.

தேவை அதிகமானதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 5 நாட்களில் 40 காசுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com