கடலூர்: வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

சுமார் 7 அடி உயரம் வரை வளர்ந்திருந்த 6 கஞ்சா செடிகளை போலீசார் கண்டறிந்து, அவற்றை வேரோடு பிடுங்கி பறிமுதல் செய்தனர்.
கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா விதைகளை வாங்கி வந்து, வீட்டின் அருகே சட்டவிரோதமாக பயிரிட்டு வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கஞ்சா செடிகள்

அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சுமார் 7 அடி உயரம் வரை வளர்ந்திருந்த 6 கஞ்சா செடிகளை போலீசார் கண்டறிந்து, அவற்றை வேரோடு பிடுங்கி பறிமுதல் செய்தனர்.

கைது

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா விதைகளை ரகசியமாக வாங்கி வந்து தனது வீட்டின் அருகே பயிரிட்டு வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா செடிகளை வளர்த்த ஆனந்த குமார் (34) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com