தவெகவில் இணைய முடிவா? முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளில் பலரும் கடந்த சில தினங்களாக அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகி வருகிறார்கள்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
Published on

கரூர்,

முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வௌியாகின. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்து வௌியே வந்த அவரிடம் நிருபர்கள் கேட்டபோது த.வெ.க.வில் இணைய உள்ளதாக வெளியான தகவலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், த.வெ.க.வில் இணைய உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. இது தவறான தகவலாகும் என தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com