5 மண்டலங்களில் மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை விவரம்

வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தமிழகத்தில் 5 மண்டலங்களில் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதன் எண்ணிக்கை விவரம் மண்டலம் வாரியாக வருமாறு:-

சென்னை மண்டலத்தில் சென்னை தெற்கில் 14-ம், வடக்கில் 18-ம், மத்தியில் 15-ம், காஞ்சிபுரம் வடக்கில் 12-ம், தெற்கில் 7-ம், திருவள்ளூர் மேற்கில் 4-ம், கிழக்கில் 29-ம் என 99 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. கோவை மண்டலத்தில் கரூரில் 8-ம், நீலகிரியில் 27-ம், கோவை தெற்கில் 21-ம், வடக்கில் 48-ம், ஈரோட்டில் 39-ம், திருப்பூரில் 30-ம் என 173 டாஸ்மாக் கடை களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல மதுரை மண்டலத்தில் மதுரை வடக்கில் 13-ம், சிவகங்கையில் 18-ம், கன்னியாகுமரியில் 18-ம், நெல்லையில் 33-ம், தூத்துக்குடியில் 63-ம், மதுரை தெற்கில் 32-ம், விருதுநகரில் 37-ம், ராமநாதபுரத்தில் 29-ம், திண்டுக்கல்லில் 26-ம் என 281 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.

சேலம் மண்டலத்தில் வேலூரில் 6-ம், தர்மபுரியில் 7-ம், கிருஷ்ணகிரியில் 6-ம், அரக்கோணத்தில் 7-ம், திருவண்ணாமலையில் 20-ம், சேலத்தில் 20-ம், நாமக்கல்லில் 14-ம் என 80 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

திருச்சி மண்டலத்தில் தஞ்சாவூரில் 6-ம், பெரம்பலூரில் 5-ம், திருவாரூரில் 5-ம், விழுப்புரத்தில் 11-ம், நாகப்பட்டினத்தில் 4-ம், திருச்சியில் 16-ம், கடலூரில் 21-ம், புதுக்கோட்டையில் 16-ம் என 84 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com