மே 4ம் தேதி வரை தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்படும்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் அழகுமீனா தெரிவித்தார்.
மே 4ம் தேதி வரை தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்படும்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மே 4-ம் தேதி (4.5.2026) கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு பொதுமக்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை குறித்த புகார்கள் அல்லது சந்தேகங்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை வருகிற மே 1-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும்.

வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com