ரெயில் நிலையங்களில் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ அறைகள்: தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியது

சுகாதார மையங்களுக்கு பரிந்து ரைத்து அழைத்துச் செல்வதற்கும் இது வழிவகுக்கும்.
ரெயில் நிலையங்களில் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ அறைகள்: தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியது
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம், எழும்பூர், தாம்பரம், காட்பாடி மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் 24 மணி நேரமும் இயங்கும் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ அறைகளை இயக்கு வதற்கும் மற்றும் பராமரிப்பதற்கும் தகுதியான நிறுவனங்களிடமிருந்து டெண்டர் கோரப்படுகிறது. பயணிகள் மற்றும் ரெயில் நிலையத்தைப் பயன் படுத்துபவர்களுக்கு தேவையான அவசர மருத்துவ உதவிகளை உடனுக்கு டன் வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மருத்துவ அறைகளில் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள், முதலு தவி வசதிகள், அவசர சிகிச்சை ஆதரவு, அத்தியாவசிய மருந்துகள், ஆம்பு லன்ஸ் சேவை மற்றும் உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் ஆகியவை 24 மணி நேரமும் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும். மருத்துவ நெறிமுறைகள் மற்றும் ரெயில்வே வழிகாட்டுதல்களின்படி, மேம்பட்ட மருத் துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை தங்களின் முதன்மை ஆஸ்பத்திரி அல்லது அதனுடன் தொடர்புடைய சுகாதார மையங்களுக்கு பரிந்து ரைத்து அழைத்துச் செல்வதற்கும் இது வழிவகுக்கும். தகுதியான ஆஸ்பத் திரிகள், சுகாதார சேவை நிறுவனங்கள் மற்றும் தேவையான அனுபவமும், சட்டப்பூர்வ உரிமங்களும் கொண்ட மருத்துவ முகமைகள் டெண்டரில் பங் கேற்கலாம். விருப்பமுள்ள ஏலதாரர்கள் இந்திய ரெயில்வேயின் www.ireps.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 1-ந்தேதி மாலை 3 மணிக்குள் தங்களின் ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்கலாம். இதுதொடர் பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 8072114520 என்ற எண் ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com