ஈரோடு: கிரேன் மூலம் ரெயில் எஞ்சினை தூக்கும்போது விபத்து

ரெயில் பெட்டி கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு: கிரேன் மூலம் ரெயில் எஞ்சினை தூக்கும்போது விபத்து
Published on

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள லோகோ பணிமனையில் 70 டன் எடையுள்ள ரெயில் பெட்டி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கிரேனில் ஏற்பட்ட பழுதால் ரெயில் பெட்டி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

ரெயில் பெட்டி கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவையான நடவடிக்கைகயை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com