கோவையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

கோவையை அடுத்த ஒண்டிப்புதூர் சூர்யா நகரில் உள்ள ஒரு மருந்து கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகி வைரலானது.
கோவையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது
Published on

கோவை,

கோவையை அடுத்த ஒண்டிப்புதூர் சூர்யா நகரில் ஒரு மருந்து கடை உள்ளது. இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகி வைரலானது.

உடனே மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்த கோவை நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த ராமநாதன் (வயது 45) என்பவரை விசாரித்தனர்.

அதில், அவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு 2 வருடம் டிப்ளமோ பார்மசி படித்து விட்டு மெடிக்கல் கடை நடத்தி கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலி டாக்டரான ராமநாதனை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com