5 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

பரமக்குடியில் 5 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
5 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
Published on

பரமக்குடி,

பரமக்குடியை சேர்ந்தவர் 35 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 7 வயது 5 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மனைவி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டு தாய் எழுந்து வீட்டில் உள்ள மின் விளக்கை போட்டுள்ளார். அப்போது 5 வயது குழந்தையிடம் பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கணவன் இதை வெளியில் சொன்னால் உன்னையும் குழந்தைகளையும் கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அந்த தாய் பரமக்குடியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பெற்ற மகளையே பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com