மணல் கொள்ளையை தடுக்க சென்ற தலைமை காவலர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

அரசு விரைவு பேருந்து டிராக்டரின் பின்னால் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து அதை ஓட்டிச் சென்ற தலைமை காவலர் மகேஷ் குமார் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.
விபத்தில் சிக்கி உயிரிழப்பு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றும் மகேஷ் குமார் என்பவர் இன்று நள்ளிரவு கோப்பேரி மடம் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்தவர்களை தடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து கோப்பெரி மடத்திலிருந்து தேவைப்பட்டினம் காவல் நிலையத்திற்கு டிராக்டரோடு சேர்த்து மணலை எடுத்துச்செல்லும் போது பெருவயல் என்னும் இடத்தில் ராமநாதபுரத்தில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து டிராக்டரின் பின்னால் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து அதை ஓட்டிச் சென்ற தலைமை காவலர் மகேஷ் குமார் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உரியிழந்தார்.

மணல் கொள்ளை

நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்ட தேவிபட்டினம் போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணல் கொள்ளையை தடுக்கச் சென்று டிராக்டரை பறிமுதல் செய்து வரும் போது விபத்தில் சிக்கி தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த சக போலீசார் மற்றும் அவரது உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com