திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு
Published on

திமுக தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் பதிவிட்டு இருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன்.

தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான முக ஸ்டாலின் அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்” என்று பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com