கனவிலும் கூட நமக்கு தீங்கு எண்ணாத நமது தாயைப் போற்றுவோம் - வானதி சீனிவாசன் வாழ்த்து

அன்னை என்பவள் வெறும் அன்பு மட்டுமல்ல,அவள் தியாகத்தின் உருவம் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கனவிலும் கூட நமக்கு தீங்கு எண்ணாத நமது தாயைப் போற்றுவோம் - வானதி சீனிவாசன் வாழ்த்து
Published on

கோவை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

அன்னை என்பவள் வெறும் அன்பு மட்டுமல்ல. அவள் தியாகத்தின் உருவம். கருணையின் மறுவடிவம். எத்தனை வயதுகள் கடந்தாலும் அன்னைக்கு நாம் என்றும் குழந்தையே. தாய்ப்பாலின் தூய்மையைப் போன்ற ஒப்பழுக்கற்ற, கனவிலும் கூட நமக்கு தீங்கு எண்ணாத நமது தாயைப் போற்றுவோம். உலகின் அனைத்து ஆசீர்வாதங்களிலும் மிக உயர்ந்தது தாயின் ஆசீர்வாதம்.

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com