பெரும்பிடுகு முத்தரையரின் வீரத்தையும், புகழையும் நினைவு கூர்ந்து தலை வணங்குவோம் - வானதி சீனிவாசன்

பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் நினைவாக துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கடந்த ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளார்.
பெரும்பிடுகு முத்தரையரின் வீரத்தையும், புகழையும் நினைவு கூர்ந்து தலை வணங்குவோம் - வானதி சீனிவாசன்
Published on

கோவை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

களம் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடி வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் 1351-வது சதய விழாவான இன்று அவரது வீரத்தையும், புகழையும் நினைவு கூர்ந்து தலை வணங்குவோம்.

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் நினைவாக துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கடந்த ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்டடு தமிழர் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், வீரத்தை உலகறிய செய்து பெருமைப் படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழகத்தின் தொன்மையை மீட்டெடுத்தும், தொடர்ந்து தமிழ்நாட்டை உலக நாடுகளில் பெருமைப்படுத்தி வரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com