பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை (19.9.2025, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அடையாறு: கஸ்தூரிபாய்நகர் 1வது பிரதான சாலை மற்றும் குறுக்குத் தெரு, நேரு நகர் 1 முதல் 4வது தெரு, பக்தவச்சலம் நகர் 2 முதல் 5வது தெரு.
மாத்தூர்: சின்னசாமிநகர், எம்.எம்.டி.எ. பிரதான சாலை, ஓமகுலம் தெரு, சக்திநகர், நேருநகர், பெருமாள்கோயில் தெரு, டெலிகாம்நகர், பெரிய மாத்தூர், புதுநகர், மஞ்சம்பக்கம், அச்சிஸ்நகர், அகர்சன் கல்லூரி சாலை.
ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு, கிருதலாபுரம், பூதூர், அருமந்தை, விச்சூர், மேட்டுபாளையம், கண்டிகை, வெள்ளிவாயல்.
செம்பியம்: முத்தமிழ் நகர் 1 முதல் 7வது பிளாக், கொடுங்கையூர் சீனிவாசபெருமாள் தெரு, மீனாம்பாள் தெரு, கௌவுதமபுரம் ஹவுசிங் போர்டு, பெரியார்நகர், வியாசர்பாடி, திருப்பூர் குமரன் தெரு, எஸ்.எஸ்.வி. கோயில் தெரு, எம்.பி.எம்.தெரு, சுப்ரமணிநகர், அஞ்சுகம்நகர், ராமதாஸ்நகர், யூனைடெட் காலனி, திருமலைநகர், திருப்பதிநகர், தணிகாசலம்நகர், ராமலிங்கம் காலனி, குமரன்நகர், ராய்நகர், வெற்றிநகர், வெற்றிவேல்நகர், ரெட்ஹில்ஸ் சாலை, புதிய காமராஜர்நகர், சக்திவேல்நகர், சமாத்ரியகாலனி, ராஜாதெரு ஆகிய இடங்களில் நாளை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






