7 கிலோ தடை செய்த புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது: ரூ.27 ஆயிரம் பறிமுதல்

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.
7 கிலோ தடை செய்த புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது: ரூ.27 ஆயிரம் பறிமுதல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வடபாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் நேற்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அதில் அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் (வயது 52) என்பவர் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே மேற்சொன்ன போலீசார் முத்துராஜை கைது செய்து அவரிடமிருந்த 7 கிலோ 125 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.27 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com