சென்னையில் லாரி மோதி தாய், குழந்தை உயிரிழப்பு

நித்யானந்தம் என்பவர் மனைவி, குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையில் லாரி மோதி தாய், குழந்தை உயிரிழப்பு
Published on

சென்னை,

சென்னை மாதவரம் ரவுன்டானாவில் பைக் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தாய், குழந்தை உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த கணவர் நித்யானந்தம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நித்யானந்தத்தின் மனைவி ஷர்மிளா மற்றும் அவரது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நித்யானந்தம் என்பவர் மனைவி, குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com