நாமக்கல்: பணமோசடி செய்த 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ.1 கோடி அபராதம்

நாமக்கல் மாவட்டம், பெரியமணலியில் ஈமு கோழி பண்ணை நடத்திய 2 பேர், 115 முதலீட்டாளர்களிடம் ரூ.2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் மோசடி செய்தனர்.
சிறை தண்டனை
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், பெரியமணலியில் கடந்த 2012-ம் ஆண்டு ஆதவன் ஈமு கோழி பண்ணை நடத்தி 115 முதலீட்டாளர்களிடம் ரூ.2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் பெரும் மோசடி செய்ததாக உரிமையாளர்கள் சந்திரசேகரன் (வயது 48) மற்றும் சோமசுந்தரம்(55) ஆகியோர் மீது நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை:

இந்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்தது. இறுதி விசாரணையில், மேற்சொன்ன 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு வழங்கினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com