நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்: இன்று திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இன்று அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்: இன்று திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்
Published on

சென்னை,

"நீட்" தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் "நீட் விலக்கு, நம் இலக்கு" எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை கடந்த 21-10-2023 சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து முதல் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இக்கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை கொண்டு சென்றிட ஏதுவாக, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில், இன்று மாலை 6.30 மணியளவில், "தி.மு.க.கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்" காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com