பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் செல்வதற்கான தடை நீட்டிப்பு

இரு நாடுகளுக்கு இடையே ராணுவத் பதற்றம் தணிந்திருந்தாலும், தூதரக உறவுகள் இன்னும் சீராகவில்லை.
பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் செல்வதற்கான தடை நீட்டிப்பு
Published on

இஸ்லாமாபாத்,

இந்திய சிவில் மற்றும் ராணுவ விமானங்கள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி இந்த தடை அடுத்த மாதம் 24-ந்தேதி வரை நீடிக்கும் என பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ராணுவ மோதலைத் தொடர்ந்து இந்த தடை முதன்முதலில் விதிக்கப்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு இதேபோன்ற தடையை விதித்துள்ளது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே ராணுவத் பதற்றம் தணிந்திருந்தாலும், தூதரக உறவுகள் இன்னும் சீராகவில்லை.

இந்த நீண்ட கால வான்வெளி மூடல் காரணமாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் இந்திய விமான நிறுவனங்களுக்குப் பயண நேரமும், எரி பொருள் செலவும் பலமடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com