செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

செங்கோட்டை-தாம்பரம் ரெயில் 29-ந்தேதி மாற்றுப்பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
Published on

திருச்சி,

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லை ரெயில் நிலையத்தில் யார்டு பராமரிப்பு மற்றும் வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வருகிற 29-ந்தேதி செங்கோட்டையில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரெயில் (எண்:20684) தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக திருச்சி வந்து தாம்பரம் செல்லும்.

அன்று இந்த ரெயில் பாவூர்சத்திரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, நெல்லை வழியாக இயங்காது. கூடுதலாக இந்த ரெயில் சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com