சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது
Published on

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கொய்யாப்பழம் பறித்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம், கொய்யாப்பழம் கேட்டுள்ளார். இதையடுத்து முருகானந்தத்துக்கு பழத்தை கொடுக்க சிறுமி சென்றார்.

அப்போது அந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் முருகானந்தத்தை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com