‘ஜாதி, மத பேதமின்றி கோவில் திருவிழாவை நடத்த வேண்டும்’ - மதுரை ஐகோர்ட்டு கிளை

கோவில் திருவிழாக்களில் சுகாதார அபாயங்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
‘ஜாதி, மத பேதமின்றி கோவில் திருவிழாவை நடத்த வேண்டும்’ - மதுரை ஐகோர்ட்டு கிளை
Published on

மதுரை,

திருச்சி பீமாநகரில் உள்ள செடல் மாரியம்மன் கோவிலில் வைகாசி தேர்த்திருவிழா நடத்த அனுமதி கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, திருவிழாக்களின்போது உருவாகும் திடக்கழிவுகள் மற்றும் சுகாதார அமைப்புகள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை என்று தெரிவித்தார். மேலும், ஜாதி, மத பேதமின்றி அனைவரும் இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும் என்றும், யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

திருவிழா நடக்கும் இடங்களில் தற்காலிக குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தக் கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com