அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

திமுக அரசின் வஞ்சகத்தால் தற்போது தமிழக அரசுத்துறைகள் காலிப்பணியிடங்களால் நிரம்பி வழிகின்றன என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தமிழக அரசுத்துறைகளில் 40 சதவீதக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காலிப்பணியிடங்கள்

ஏற்கனவே ஐந்து லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி அளித்து, ஐந்தாண்டுகாலமாக ஒரு லட்சம் பணியிடங்களைக் கூட நிரப்பாமல் ஏமாற்றிய முந்தைய திமுக அரசின் வஞ்சகத்தால் தற்போது தமிழக அரசுத்துறைகள் காலிப்பணியிடங்களால் நிரம்பி வழிகின்றன. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இளைஞர்களின் பிரதிநிதியாகவும் மாற்றுச் சக்தியாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தவெக அரசு உடனடியாக தகுதித் தேர்வுகளை நடத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளை நனவாக்கி, அரசு இயந்திரம் சீராகச் செயல்பட வழிவகுக்க வேண்டும். அது தான் ஒரு பொறுப்புள்ள அரசுக்கு அழகு. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com