காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண்: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

வாலிபர் இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னையை அடுத்த புழல் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சக்திவேல் (18 வயது). ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். மேலும் அவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பெண்ணிடம் சக்திவேல் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அதற்கு அந்த பெண், காதலிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சக்திவேல் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com