புதிய தவெக அரசு வெற்றி கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவர வேண்டும் - அண்ணாமலை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவனம் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய தவெக அரசு வெற்றி கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவர வேண்டும் - அண்ணாமலை
Published on

சென்னை,

தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 15 நாட்களில் 25 கொலைகள் நடந்துள்ளன. அதில் 4 இரட்டை கொலைகள் ஆகும்.19 பாலியல் குற்றங்கள் அரங்கேறி உள்ளன. பெண்களின் பாதுகாப்பும் விவாதத்துக்குள்ளாகி உள்ளன. முதல்-அமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறார் என விவாதம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்தநிலையில், தமிழக காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் 5 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். தமிழ்நாட்டில் கொலைகாரர்கள், போதைப்பொருள், பாலியல் கடத்தல்காரர்கள், வன்கொடுமை செய்பவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

மாநில காவல்துறை கடந்த கால நிகழ்வுகளில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. புதிய தவெக அரசு தனது வெற்றிக் கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவந்து, களத்தில் அரங்கேறி வரும் இந்த மோசமான உண்மைகளை எதிர்கொள்ள இன்னும் தொடங்கவில்லை என அதில் பதிவிட்டுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com