கிராம சபை கூட்டம் மே 1ல் கிடையாது

வாக்குப்பதிவு முடிந்தாலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 4-ம் தேதி வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
கிராம சபை கூட்டம் மே 1ல் கிடையாது
Published on

சென்னை,

'தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மே 1ல் கிராம சபை கூட்டம் நடக்காது' என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த, 23ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தாலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 4ம் தேதி வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். வழக்கமாக தொழிலாளர் தினமான, மே 1ல், அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடக்கும். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மே 1ம் தேதியன்று, கிராம சபைக்கூட்டம் நடக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com