தூத்துக்குடி: முருங்கை மரத்தில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

குடும்பப் பிரச்சினையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: முருங்கை மரத்தில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள செம்பூர், சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளிரத்தினத்தின் மகன் ராஜ் (35). இவருக்கு கடந்த சில நாட்களாக குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்கிட்டு தற்கொலை

இதனால் மனவேதனையில் இருந்த ராஜ், நேற்று இரவு தனது வீட்டின் வெளியே இருந்த முருங்கை மரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தீவிர விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com