உதகையில் குட்டிகளோடு சாலையை கடந்த புலி

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதிகளை கொண்டுள்ளது.
உதகையில் குட்டிகளோடு சாலையை கடந்த புலி
Published on

உதகை,

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இங்கு புலி, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான், கடமான், சிறுத்தை, காட்டு யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. கடந்த மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முதுமலை வனப்பகுதி வறட்சியாக காணப்பட்டது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு விலங்குகள் இடம்பெயர்ந்த நிலையில் சாலையில் அதன் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

வனவிலங்குகள் நடமாட்டம்

தற்போது கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உதகை அருகே மாயார் சாலையில் இரண்டு குட்டிகளுடன் தாய் புலி சாலையைக் கடந்து சென்றது. தாய் புலியுடன் ஒரு குட்டி புலி முன்னே ஓடி செல்ல மற்றொரு குட்டி பின்னால் சாலைய கடந்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com