திருப்பூர்: கிணற்றில் தவறி விழுந்து பிளஸ்-2 மாணவி பலி

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த ஒருவர், மது குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
மாணவி பலி
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 45). இவரது 2-வது மகள் ரித்திகா(17), பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ரவிசந்திரன் மது குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

பிளஸ்-2 மாணவி பலி:

அப்போது, ரவிச்சந்திரன் 'நான் கிணற்றில் விழுந்து சாகிறேன்' என கூறிக் கொண்டே வீட்டிற்கு அருகாமையில் உள்ள 100 அடி ஆழ கிணற்றை நோக்கி வேகமாக ஓடினார். தற்போது அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. அவரை காப்பாற்ற ரித்திகாவும் பின்னால் ஓடினார். அப்போது ரித்திகா, தனது தந்தையை பிடிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவர் கால் தவறி அந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com