இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Nov 2025 1:41 PM IST
"கூட்டணி பற்றி பேச வேண்டாம்" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் அதிமுகவினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். கூட்டணி தானாக நடக்கும். கவலை வேண்டாம். பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனித்தாலே வெற்றி உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5 Nov 2025 1:11 PM IST
ஜாய்யை திருமணம் செய்து கொண்டதாக நான் ஒப்புக்கொள்ளவில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டம்
இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு நடைபெற்றது என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
- 5 Nov 2025 1:10 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ மீண்டும் விசாரணை
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
- 5 Nov 2025 1:07 PM IST
வங்கிகள் தனியார்மயம்; நிர்மலா சீதாராமனின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது - செல்வப்பெருந்தகை
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உறுதுணையாக இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
- 5 Nov 2025 1:03 PM IST
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை: 750 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
நேஷனல் வங்கியில் காலியாக உள்ள லோக்கல் பேங்க் ஆபிசர் எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- 5 Nov 2025 1:02 PM IST
'Gen Z' வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - ராகுல் காந்தி
வாக்குத் திருட்டு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-
அரியானாவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறுவதை தடுத்து, தோற்கடிக்க சதி நடந்துள்ளது. பல கருத்துகணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறியிருந்தன. ஆனால் முடிவு வேறாக இருந்தது. வரலாற்றில் முதல்முறையாக தபால் வாக்குகளுக்கும், EVM வாக்குகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது.
அரியானா சட்டமன்றத் தேர்தலில் பிரேசில் மாடல் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் பல பெயர்களில் 22 வாக்குகள் பதிவாகி உள்ளது. அரியானா சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது.
தேர்தல் முறைகேடுகளை புரிந்துகொண்டு 'Gen Z' வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பிரேசில் பெண் மாடல் புகைப்படத்தை பயன்படுத்தி பல வாக்காளர்களை உருவாக்கி உள்ளனர்.
அரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்துள்ளனர். ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5 Nov 2025 12:28 PM IST
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார் - தலைவர்கள் இரங்கல்
உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக டிக் சேனி நேற்று உயிரிழந்தார்.
- 5 Nov 2025 12:26 PM IST
குப்பைகளால் வந்த நெருக்கடி... சீன விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம்
பாதுகாப்பு கருதி ‘சென்ஷோ-20’ குழுவினரை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 5 Nov 2025 12:25 PM IST
கல்யாண வீட்டில் பிரியாணி சாப்பிட்ட நபர்களுக்கு நேர்ந்த கதி - பெரிய சிக்கலில் துல்கர் சல்மான்
அரிசி நிறுவனத்தின் விளம்பர தூதரான துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- 5 Nov 2025 12:22 PM IST
“முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்” - த.வெ.க. சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


















