இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Nov 2025 10:33 AM IST
பதிவுத்துறை உதவி ஐ.ஜி. பதவி உயர்வில் சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காததால் 20% எம்.பி.சிகளுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 5 Nov 2025 10:31 AM IST
அஜித்தின் 'ஏகே 64' படத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்!
அஜித்தின் 'ஏகே 64' படம் பல மொழி ரசிகர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது.
- 5 Nov 2025 10:30 AM IST
மத்திய வர்த்தகத் துறை மந்திரி நியூசிலாந்து பயணம்
வெலிங்டன் சென்ற பியூஷ் கோயலை நியூசிலாந்து வர்த்தக மந்திரி டெட் மெக்கிலே வரவேற்றார்.
- 5 Nov 2025 10:28 AM IST
‘போக்சோ’ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது - சுப்ரீம் கோர்ட்டு கவலை
‘போக்சோ’ சட்ட பிரிவுகள் குறித்து சிறுவர்களிடமும், ஆண்களிடமும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
- 5 Nov 2025 10:27 AM IST
பாதிக்கப்பட்ட மாணவியை மீட்க தாமதம் ஏன்..? கோவை போலீசாருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
100 போலீசாரால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- 5 Nov 2025 10:01 AM IST
ஜாமீன் ரத்தை மறுஆய்வு செய்யக்கோரி நடிகை பவித்ரா கவுடா சுப்ரீம் கோர்ட்டில் மனு
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஆண்டு(2024) கொலை செய்யப்பட்டார். கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கர்நாடக ஐகோர்ட்டு சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு கூறினர். மேலும் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 3 மாதங்களாக சிறையில் உள்ளனர். இந்த நிலையில் நடிகை பவித்ரா கவுடா சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
- 5 Nov 2025 9:59 AM IST
காஷ்மீர் என்கவுன்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்
என்கவுன்டர் நடைபெறும் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 5 Nov 2025 9:57 AM IST
ஆஷஸ் தொடர்: முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
- 5 Nov 2025 9:56 AM IST
‘உத்தர பிரதேசத்தைப் போல் பீகாரிலும் ரவுடிகளின் வீடுகள் புல்டோசரால் தகர்க்கப்படும்’ - யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேசத்தில் ரவுடிகளின் சொத்துகள், ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
- 5 Nov 2025 9:55 AM IST
நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெற்றி
அமெரிக்காவின் நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.


















